International
பிரான்ஸ்

மகனை நிர்வாணமாக மரத்தில் கட்டிவைத்த பெற்றோர்கள்! – அவர்கள் தெரிவித்த காரணம்..!!

மகனை மரம் ஒன்றில் நிர்வாணமாக கட்டிவைத்து, தொலைபேசியில் படம் பிடித்த பெற்றோர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் Lens நகரில் இடம்பெற்றுள்ளது. 12 வயதுடைய மகனையும், 10 வயதுடைய மகளையும் நிர்வாணமாக்கி, மரத்துடன் நிற்க வைத்து கயிற்றினால் சுற்றி கட்டிவைத்து, தொலைபேசியில் காணொளி பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை பார்வையிட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர், இரண்டு சிறுவர்களையும் மீட்டதோடு, அவர்களின் பெற்றோர்களையும் கைது செய்தனர். 

சிறுவர்கள் உளநல சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர்களை விசாரணைகளுக்கு உட்படுத்தியபோது, <<எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தவறான வார்த்தை பிரயோகம் மேற்கொண்டார்கள். அவர்களை தண்டிக்கவே இவ்வாறு செய்தோம்>> என அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். 

31 மற்றும் 28 வயதுடைய அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!