International
பிரான்ஸ்

மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஆறாவது மாதம்! – Reims இல் பெரும் கலவரம்!!

இன்று சனிக்கிழமை மே 18 ஆம் திகதி, மஞ்சள் மேலங்கி போராட்ட. ஆறாவது மாதத்தை தொட்டுள்ள நிலையில், மிக குறைந்தளவான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

உள்துறை அமைச்சர் வழங்கிய தகவல்களின் படி 14:00 மணி அளவில் நாடு முழுவதும் 2,800 பேரும் பரிசுக்குள் 1,100 பேரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். Reims நகரில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. பல்வேறு கடைகளின் கண்ணாடிகளை போராளிகள் உடைத்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி கலைத்தனர். 

கடந்த 23 ஆவது வார போராட்டத்தின் போது தலையில் பலத்த காயமேற்பட்ட மஞ்சள் மேலங்கி போராளி Geneviève Legay, இன்றைய ஆர்ப்பாட்டத்தில் மீண்டும் கலந்துகொண்டார். நீஸ் நகரில் இவர் உட்பட சில நூறு போராளிகள் வீதி ஒன்றினை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Nancy நகரிலும் இந்த வன்முறை தொடர்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியினை தீயிட்டு கொழுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!