International
பிரான்ஸ்

மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெறும்போது – உள்துறை அமைச்சர் இரவு விடுதியிலா? – புதிய சர்ச்சை!!

கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் Christophe Castaner, இரவு விடுதியில் நிற்கும் காணொளி ஒன்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மார்ச் 9 ஆம் திகதி பரிசில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் 17 ஆவது வார ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. அன்று இரவு, பரிசில் உள்ள மிக பிரபலமாக இரவு விடுதி ஒன்றில் உள்துறை அமைச்சர் Christophe Castaner  இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் காணொளிகளும் Closer பத்திரிகையினால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அதேவை, உள்துறை அமைச்சர் Christophe Castaner இது குறித்து தெரிவிக்கும் போது, << இது முழுக்க முழுக்க தனிநபர் சுதந்திரம். அது தனியார் விருந்து விழா. நான் எனது குடும்பத்துடன் கலந்துகொண்டிருந்தேன். இது மதிக்கப்படவேண்டிய ஒன்று.>> என குறிப்பிட்டார். மார்ச் 9 ஆம் திகதி 23:30 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை அவர் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மக்கள் வீதிகளில்  இறங்கி போராட்டத்தில் ஈடுபடும் போது உள்துறை அமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது என பல விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!