International
பிரான்ஸ்

மஞ்சள் மேலங்கி போராட்டம்! – மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட உணவகங்கள், தங்குமிடங்கள்!!

மஞ்சள் மேலங்கி போராட்டத்தினால் பிரான்சின் பல உணவகங்கள், தங்குமிடங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது. 

கடந்தவருடம், 2018 ஆம் ஆண்டு வரலாறு காணாத சுற்றுலாப்பயணிகளை பிரான்ஸ் சந்தித்திருந்தது. குறிப்பாக பரிசில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் குவிந்திருந்தனர். இதனால் சுற்றுலாத்தளம் உட்பட உணவகங்கள், தங்குமிடங்கள் பெருத்த வருவாயை ஈட்டியது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து முன்னெக்கப்பட்டு வரும் மஞ்சள் மேலங்கி போராட்டம் இந்த வருவாயில் ஆதிக்கம் செலுத்திய்யுள்ளது. 

பரிசில் உள்ள தங்குமிட உரிமையாளர் Alejandro Duran-Ezquierdo தெரிவிக்கும்போது, <<சுற்றுலாப்பயணிகள் வருகை 30% இல் இருந்து 40% வரை குறைந்துள்ளது. குறிப்பாக சனிக்கிழமைகளில் மிக மிக குறைவான வருகையே உள்ளது. முன்பதிவு செய்யப்பட்டிருந்தவை அனைத்தும் மூன்று மாதங்களுக்கு பின்னர் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. பின்னர் அவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் தொடர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது>> என அவர் குறிப்பிட்டார்.  

குறிப்பாக சீனாவில் இருந்து பயணிகள் வருகை தருவது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடங்களில் உலகில் அதிக சுற்றுலாப்பயணிகளை சந்தித்த நாடாக பரிஸ் இருந்தமையும், 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் அது தகர்க்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!