International
பிரான்ஸ்

மஞ்சள் மேலங்கி போராட்டம் நிறுத்தப்படவேண்டும்! – கருத்துக்கணிப்பில் 56 வீத மக்கள் தெரிவிப்பு!!

மஞ்சள் மேலங்கி போராட்டம் நிறுத்தப்படவேண்டும் என தாம் நம்புவதாக 56 வீத பிரெஞ்சு மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆன நிலையில், இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. செய்தி தொலைக்காட்சியான BFMTV மற்றும் Elabe poll ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்ட நேரடி கருத்துக்கணிப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.  கலந்துகொண்டவர்களில் 56 வீதமான மக்கள் <<மஞ்சள் மேலங்கி போராட்டம் நிறுத்தப்படவேண்டும்>> என தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை 43 வீத மக்கள் ஆர்ப்பாட்டம் தொடரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கணிப்பு பெப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இணையத்தளமூடாக 1,001, பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்டிருந்தது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!