International
பிரான்ஸ்

மஞ்சள் மேலங்கி போராட்டம்! – காவல்துறையினர் மீது 174 விசாரணைகளை மேற்கொள்ளும் IGPN!!

மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இவரை, 174 விசாரணைகளை காவல்துறையினர் மீது IGPN நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மார்ச் 13 ஆம் திகதி உள்துறை அமைச்சர் Christophe Castaner இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர்  தெரிவிக்கும் போது, <<மொத்தமாக 174 விசாரணைகளை காவல்துறையினர் மீது IGPN ஆரம்பித்துள்ளது. அங்கு ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்>> என குறிப்பிட்டார்.

நவம்பர் 17, 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் நான்கு மாதங்களை நெருங்கிக்கொண்டுள்ளது. இதுவரை பலத்த வன்முறைகள் வெடித்தும், காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியும், பதிலுக்கு அவர்கள் LBD (இறப்பர் குண்டு துப்பாக்கி) துப்பாக்கிச்சூடு நடத்தியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!