International
பிரான்ஸ்

மஞ்சள் மேலங்கி போராளிகள் மூட்டிய தீ! – சிக்கிக்கொண்ட தாயும் குழந்தையும்…!!

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், போராளிகள் ஏற்படுத்திய தீயில் இருந்து பெண் ஒருவரும் அவரின் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளனர்.

சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகே உள்ள Boulevard Roosevelt வீதியில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றது. மஞ்சள் மேலங்கி போராளிகள் ஏற்படுத்திய தீயில், இரண்டாவது தளத்தில் இளம் பெண் ஒருவரும் அவரின் குழந்தையும் சிக்கிக்கொண்டனர். 14:00 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தபோது, தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தீ சம்பவத்தில் 11 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் Christophe Castaner இது குறித்து கண்டனம் வெளியிட்டதோடு, <<அவர்கள் கொலையாளிகள்!>> எனவும் விமர்சித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!