International
பிரான்ஸ்

மஞ்சள் மேலங்கி – மேலதிகமாக 1,000 நிறுவனங்கள் பாதிப்பு!!

மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் பல ஆயிரம் கடை, நிறுவனங்கள், தொழிலகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலதிகமாக 1,000 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்ணாடிகள் உடைத்தும், கொள்ளையில் ஈடுபட்டும், இருக்கைகளை உடைத்தும் பலத்த சேதங்களை மஞ்சள் மேலங்கி போராளிகள் ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில், வியாபாரத்தளங்கள் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நஷ்ட்ட ஈட்டுத்தொகையினை அரசு வழங்கி வரும் நிலையில், இதுபோன்று மேலதிக செலவீனங்களை தடுக்கும் முகமாக, மஞ்சள் மேலங்கி போராட்டத்துக்கு பல்வேறு இடங்களில் தடை விதித்து, பாதுகாப்பையும் பலப்படுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களில் 1,000 வியாபாரத்தளங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மாநில செயலாளர் Agnès Pannier-Runacher இத்தகவலை வெளியிட்டுள்ளார். 

கடந்த மார்ச் 28 ஆம் திகதி வரை 8,877 நிறுவனங்களுக்கு நஷ்ட்ட ஈடு வழங்கப்பட்டிருந்தது. இது தவிர 1,865 நிறுவனங்களுக்கு நஷ்ட்ட ஈடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்குள்ளாக மேலும் 1,000 நிறுவனங்கள் அதிகரிப்பு அரசு தரப்பில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!