International
பிரான்ஸ்

மண் சரிவுக்குப் பின்னர் – இன்று முதல் சேவையை ஆரம்பித்த RER B!!

கடந்த ஜூன் 12 ஆம் திகதி இடம்பெற்ற மண் சரிவைத் தொடர்ந்து தடைப்பட்ட போக்குவரத்து தடை, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 8 ஆம் திகதியில் இருந்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

Courcelle-sur-Yvette பகுதியில் கடந்த ஜூன் 12 ஆம் திகதி அதிகாலை RER B தொடரூந்து தடம் புரண்டதைத் தொடர்ந்து, Saint-Rémy-lès-Chevreuse (Yvelines) மற்றும் Gif-sur-Yvette (Essonne) ஆகிய நகரங்களுக்கிடையே சேவைகள் தடைப்பட்டன. மண் சரிவு காரணமாக இந்த போக்குவரத்து தடைக்குள்ளானது.

இந்நிலையில், மீண்டும் சேவைகள் இயங்குவதாக RATP அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மணிக்கு 30 கி.மீ எனும் வேகத்தில் தொடரூந்து வெள்ளோட்டம் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் ஓகஸ்ட் மாத இறுதி வரை இதே வேகத்தில் தொடரூந்துக்கள் இப்பகுதியில் இயக்கப்படும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!