International
பிரான்ஸ்

மதவாதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! – அரசியல் தலைவர்கள் உட்பட 20,000 பேர் பங்கேற்பு!!

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, யூத மதத்துக்கு எதிராக மற்றும் மதவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் உட்பட, 20,000 பேர் கலந்துகொண்டனர்.

மொத்தமாக ஐம்பது வெவ்வேறு அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து இந்த பேரணியை ஒருங்கிணைத்திருந்தார்கள். செவ்வாய்க்கிழமை 19:00 மணி அளவில் Place de la République இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவியத்தொடங்கினார்கள். இவர்களுடன் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, பிரதமர் எத்துவா பிலிப் முன்னாள் ஜனாதிபதிகளான நிக்கோலா சர்கோஷி, பிரான்சுவா ஒலோந்து என பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மதவாதத்துக்கு எதிராக பல்வேறு கோஷங்களையும், கருத்துக்களையும் தலைவர்கள் தெரிவித்தனர். <<இதுவரை இடமெற்ற அனைத்தும் போதும். வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் இதுவேயாகும்!’ என என நிக்கோலா சர்கோஷி தெரிவித்தார்.

தவிர, பிரதமர் எத்துவா பிலிப், << மதவாதத்துக்கு எதிராக சட்டமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்>> எனவும் உறுதியளித்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!