International
பிரான்ஸ்

மனைவி மீது கணவர் வன்முறை! – காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி!!

மனைவி மீது வன்முறை நிகழ்த்திய கணவர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Versailles இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  Versailles (Yvelines) உள்ள rue Montbauron வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.  23:55 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், தனது மனைவியை அவரது கணவர் கத்தி ஒன்றின் மூலம் மிரட்டிக்கொண்டிருந்ததை கண்டுள்ளனர். ஆயுதத்தை போட்டுவிட்டு சரணடையும் படி காவல்துறையினர் பணித்தனர். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல் கத்தி மூலம் மனைவியின் கால்களில் கத்தியால் தாக்கியுள்ளார். 

இதனால் காவல்துறையினர் துப்பாக்கியை எடுத்து, துப்பாக்கிமுனையில்  சரணடையும் படி கட்டளையிட்டனர். ஆனால் எதிபாரா விதமாக குறித்த நபர் காவல்துறையினரை தாக்குவதற்காக அவர்கள் மீது கத்தியுடன் பாய்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 48 வயதுடைய குறித்த நபர் பலியாகியுள்ளார். காவல்த்குறையினரை விசாரிக்கும் காவல்துறையினர் (police to police) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!