International
பிரான்ஸ்

மழை! – இல்-து-பிரான்சுக்குள் 400 கி.மீ தூர போக்குவரத்து தடை!!

இன்று வியாழக்கிழமை காலை, இல்-து-பிரான்சின் கணிசமான பிராந்தியங்களில் அடை மழை பெய்ததால் வீதிகளில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

இன்று மார்ச் 14, வியாழக்கிழமை பரிசின் புறநகர் மற்றும் இல்-து-பிரான்சின் மாவட்டங்களில் மழை பெய்ததோடு, வீதிகளில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்தும் ஏற்படுத்தியது. காலை 8:28 மணிக்கு 418 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. ‘இது விதிவிலக்கான ஒரு சம்பவம்!’ என வீதி கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக Le Bourget பகுதியை ஊடறுக்கும் A3 சாலையில் மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியிருந்தன. அதேபோன்று Evry பகுதியிலும் N104 நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டிருந்தது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!