International
பிரான்ஸ்

மாணவர்கள் மீது வன்முறை! – இரு காவல்துறை அதிகாரிகளுக்கு சிறை!!

மாணவர்களை கைது செய்யும் போது வன்முறையினை பிரயோகித்த குற்றத்துக்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை Pontoise (Val-d’Oise) நகர குற்றவியல் நீதிமன்றத்தினால் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு அதிகாரிகளும் கடந்த 2017 ஆம் ஆண்டு Cergy நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யும் போது வன்முறையினை பிரயோகித்துள்ளனர். இரு அதிகாரிகளுக்கும் ஆறு மாத சிறைத்தண்டனையும், எட்டு மற்றும் பத்து மாத பயிற்சி தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

தவிர, குறித்த இரு அதிகாரிகளுக்கும் சில மாணவர்களுக்கு தலா €1,500 நஷ்ட்ட ஈடும் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  Cergy இல் பொறியியல் பயிலும் இரு மாணவர்கள் மீது 2017 ஆம் ஆண்டு மே 4 ஆம் திகதி இரவு இவர்கள் வன்முறை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!