International
பிரான்ஸ்

மார்செய்யின் கொலையாளிகள் கைது!!

ஒரு சகோதரனைப் படுகாலை செய்து, மற்றைய சகோதரனைப் படுகொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்செய் நகரில், போதைப்பொருட் கடத்தல் பிணக்கில் கணக்குத் தீர்ப்பதற்கான பழிவாங்கற் படுகொலை இது எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

27 மற்றும் 33 வயதுடைய இரு கொலையாளிகளும் காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல குற்றப்பதிவுகள் உள்ளதாகவும், அதில் தடைசெய்யப்பட ஆயுதங்கள் வைத்திருந்தமை, கொள்ளை போன்ற பல குற்றப்பதிவுகளும் இருக்கின்றன எனறும், காவற்துறையினர் தெரிவிததுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, 42 மற்றும் 44 வயதுடைய இரண்டு சகோதரர்கள் மீதுமே இவர்கள் கொலைத்தாக்குதல் நடாத்தி உள்ளனர். இவர்கள் சிற்றுந்தில் சென்று கொண்டிருந்தபோது, இவர்களின் சிற்றுந்து, வேறு இரண்டு சிற்றுந்தால் முடக்கப்பட போது, இவர்கள் மீத சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்கள் நடாத்தப்பட்டிருந்தன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!