International
பிரான்ஸ்

மீண்டும் ஓரினச்சேர்க்கையாளர் மீது தாக்குதல்! – ஆன் இதால்கோ கண்டனம்!!

ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது இந்த ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறும் மூன்றாவது தாக்குதல் இது. கடந்த சனிக்கிழமை பரிசில் நபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள வீதி ஒன்றில் வைத்து குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார். முகத்தில் பலமாக தாக்கப்பட்டு, அவரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் தன்னை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். “இது போன்ற புகைப்படங்களை நான் பதிவேற்றுவேன் என நினைத்திருக்கவில்லை. தாக்குதல்கள் எல்லாம் மற்றவர்களுக்குத் தான் இடம்பெறும் என நினைத்திருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ  இந்த தகவலை பகிர்ந்து, தனது கண்டனத்தையும் வெளியிட்டார். “வணக்கம். இந்த தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்புவதை நான் ஆதரிக்கின்றேன். உங்கள் குரலை மேலும் உயர்வாகவும், சத்தமாகவும் பதிவு செய்யுங்கள். இந்த தாக்குதலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வது அவசியமாகும். காவல்துறையினர் தாக்குதலாளிகளை கைது செய்வார்கள் என நான் நம்புகிறேன்!” என அவர் குறிப்பிட்டார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!