International
பிரான்ஸ்

மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை! – ஆன் இதால்கோ தெரிவிப்பு!!

‘நான் மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை!’ என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ நேற்று தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை செப்டம்பர் 22 ஆம் திகதி, பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள மாநகராட்சி தேர்தலில் தாம் போட்டியிடுவது தொடர்பாக முடிவெடுப்பதற்கு இன்னும் நேரம் வரவில்லை. ‘எனக்கு பரிசை மிகவும் பிடிக்கும். பரிஸ் நகர மக்களே என் கூட்டாளிகள். பரிஸ் எனது உடலில் ஒட்டியுள்ளது. ஆனால் மீண்டும் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து நான் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. அதற்கு நான் விரும்பவும் இல்லை. அதனால் நான் விண்ணப்பிக்கவில்லை!’ என குறிப்பிட்டார். இருப்பினும், போட்டியிடுவது குறித்து மிக தீர்க்கமான ஆன் இதால்கோ அறிவிக்கவில்லை.

‘தற்போது செயலில் ஈடுபட மட்டுமே நேரம் உள்ளது. சுற்றுச்சூழல் மாசடைவு எனக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது!’ என ஆன் இதால்கோ குறிப்பிட்டார். கடந்த வாரம், ஆன் இதால்கோவின் ‘வலது கை’ என குறிப்பிடப்பட்ட துணை முதல்வரான Bruno Julliard, தனது பதவியை விட்டு விலகியிருந்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!