International
பிரான்ஸ்

மீனவரை காப்பாற்றச்சென்ற மீட்புப்படையினர் மூவர் பலி! – அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி மக்ரோன்!!

மீனவர் படகு ஒன்றை காப்பாற்றச்சென்ற மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி இம்மனுவல் மக்ரோன் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

முன்னதாக, படகில் சென்ற மீனவர்கள் மூவர் உயிரிழந்திருந்ததாக கிடைத்திருந்த செய்திகள் உண்மையனவை இல்லை எனவும், உயிரிழந்த மூவர் SNSM (Société nationale de sauvetage en mer – கடல் மீட்பு தேசிய சங்கம்) இனைச் சேர்ந்த வீரர்கள் என சற்று முன்னர் அறிவிக்கபட்டுள்ளது. 

ஏழு பேர் கொண்ட மீட்புக்குழு ஒன்று மீனவர் படகு ஒன்றி தேடி கடலில் வட்ட்மிட்டதாகவும், அதன்போது அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, மூன்று அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தபட்டுள்ளது. 

படகில் இருந்த மீதி நால்வரும் மீட்கபட்டுள்ளனர். இவர்கள் காப்பாற்றச்சென்ற மீனவர் படகு, படகின் சாரதி குறித்த எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. 

உயிரிழந்த Société nationale de sauvetage en mer வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மக்ரோன், அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்துள்ளார். 

<<இந்நேரத்தில் வீரர்களின் உறவினர்களையும், குடும்பத்தினரையும் நான் நினைவு கோருகிறேன். தவிர, முழு கடற்படை அதிகாரிகளின் இரங்கல்களிலும் பங்கெடுத்துக்கொள்கிறேன்!>> என் மக்ரோன் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!