International
பிரான்ஸ்

மூன்று மடங்கு பெரிதாக மாறும் கார்-து-நோர் நிலையம்!!

ஐரோப்பாவின் மிக பழமையான மற்றும் போக்குவரத்து அதிகம் கொண்ட கார்-து-நோர் நிலையம் புதிய மாற்றங்களுக்கு உள்ளாகவுள்ளது. தற்போதைய நிலையத்தை விட மூன்று மடங்கு விஸ்தரிப்பு பணிகள் இடம்பெற உள்ளது.

கார்-து-நோர் நிலையத்தில் தற்போது ஒரு நாளைக்கு 700,000 பயணிகள் வருகை தருகின்றனர். இது வரும் 2023 ஆம் ஆண்டில் 800,000 பயணிகளாக இருக்கும் என்பதால் அந்த வருடத்துக்குள்ளாக கார்-து-நோர் நிலையத்தை விஸ்தரிக்கும் பணிகளுக்கு நேற்று திங்கட்கிழமை அனுமதி வங்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் வருகையானது 2030 ஆம் ஆண்டில் 900,000 ஆக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 2023 ஆம் ஆண்டு இந்த விஸ்தரிப்பு பணிகள் முடிவுக்கு வர உள்ளன. மொத்தமாக 600 மில்லியன் யூரோக்கள் இந்த விஸ்தரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது 36,000 சதுர மீட்டர்களாக உள்ள இந்த நிலையம் 110,000 சதுர மீட்டர்களாக (மூன்று மடங்கு) விஸ்தரிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!