International
பிரான்ஸ்

மெற்றோவில் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்! – சிக்கிய நபர்!!

மெற்றோவில் வைத்து பெண் ஒருவரிடம் ஆபாசமாக நடந்துகொண்டதோடு, பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டிருந்த நபர் ஒருவர் கடந்த சில வாரங்களாக தேடப்பட்டுவந்த நிலையில், இன்று கைது செய்யப்படுள்ளார்.

Safietou எனும் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர், டிசம்பர் மாத நடுப்பகுதியில், சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றியிருந்தார். நபர் ஒருவர்  குறித்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டிருந்ததோடு, பின் உறுப்புக்களிலும் கை வைத்துள்ளார். முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் குறித்த நபரை தனது தொலைபேசி மூலம் படம் பிடித்துள்ளார்.

அதன்பின்னர் RATP ஒரு புறம் விசாரணைகள் ஆரம்பிக்க, குறித்த பெண்ணும் காவல்துறையினரிடம் புகார் அழித்தார். அதைத் தொடர்ந்து தேடப்பட்டு வந்த குறித்த நபர் இன்று ஜனவரி 9 ஆம் திகதி, புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். à la Brigade des réseaux franciliens (BRF) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேபோன்றது சம்பவம் முன்னர் கார்-து-நோர் நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. 55,000 கண்காணிப்பு கமராக்களில் குற்றவாளியை தேடி பரிஸ் காவல்துறையினர் கைது செய்திருந்தமை வாசகர்கள்

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!