International
பிரான்ஸ்

மெற்றோ சுரங்கத்துக்குள் மீண்டும் அசிட் தாக்குதல்! – 20 வயது நபர் படுகாயம்!!

இன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் முதலாம் இலக்க மெற்றோவில் வைத்து, நபர் ஒருவர் மீது அமில திரவ தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது அசிட் தாக்குதலாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gare de Lyon க்கும்  Bastille நிலையத்துக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த மெற்றோவுக்குள் வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 15, இன்று வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த ஒரு நபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 20 வயதுடைய நபர் மிக மோசமாக எரிவு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கார்-து-லியோன் நிலையத்துக்குள் நுழைந்த தாக்குதலாளியே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளமை கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளதாகவும், குற்றவாளி தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!