International
பிரான்ஸ்

லியோன் : தீ விபத்தில் பெண்ணும் குழந்தையும் பலி!!

நேற்று சனிக்கிழமை இரவு, லியோனில் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் பெண் ஒருவரும், அவரது குழந்தையும் பலியாகியுள்ளனர்.

குறித்த நகரத்தில் உள்ள இரண்டடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று பெப்ரவரி 9 ஆம் திகதி, சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணை அணைத்தனர். அதன் பின்னர் கட்டிடத்துக்குள் இளம் பெண் ஒருவரையும் அவரது குழந்தையும் சடலமாக மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கட்டிடத்தில் இருந்து வெளியே பாய்ந்துள்ளனர். 20:30 மணிக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 21:30 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 75 தீயணைப்பு படையினர் களத்தில் பணியாற்றினர்.

லியோனின் எட்டாம் வட்டாரத்தில் உள்ள Route de Vienne வீதியில் அமைந்துள்ள கட்டிடத்திலேயே இத்தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!