International
பிரான்ஸ்

வானவில் பாதசாரிக் கடவை! – பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் ஒருவருட பூர்த்தி!!

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னரும் பரிசில் அமைக்கப்பட்டுள்ள வானவில் பாதசாரிக்கடவை ஒரு வருடத்தை தொட்டுள்ளது.

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இத்தகவலை பெருமையுடன் பகிர்ந்துள்ளார். ஓரினச்சேர்க்கையாளர்களை பெருமைப்படுத்தவும், ஏற்றுக்கொள்ளவும் கூடிய வகையில் இந்த வானவில் பாதசாரிக்கடவை பரிஸ் நான்காம் வட்டாரத்தில் உள்ள Le Marais இல் வரையப்பட்டிருந்தது. இந்த பாதசாரி கடவைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்த வானவில் பாதசாரி கடவைகளை நீக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில், பரிஸ் நிர்வாக நீதிமன்றம் இந்த வழக்குகள் அனைத்தையும் நிராகரித்து, வானவில் பாதசாரி கடவை அங்கேயே இருக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. ‘நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகப்பெரும் வெற்றி!’ என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!