International
பிரான்ஸ்

வீடற்ற நபரை பேரூந்தில் இருந்து வெளியே தள்ளிய சாரதி! – ஐந்து வருட சிறை!!

வீடற்றவர் ஒருவரை பேரூந்தில் இருந்து பலவந்ததமாக தள்ளி வெளியேற்றிய சாரதி ஒருவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த வருடத்தில் இடம்பெற்றிருந்த போதும், தற்போதே சாரதிக்கு தண்டனை வழங்கப்படுள்ளது. 2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத இறுதியில் Val-d’Oise இல் வைத்து பேரூந்து சாரதி ஒருவர் வீடற்ற நபர் (SDF) ஒருவரை பேரூந்தில் இருந்து வெளியே வன்முறை பிரயோகித்து தள்ளியுள்ளார். 37 வயதுடைய குறித்த வீடற்ற நபர் தாக்கப்படுவது பல கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்தது. Garges-Sarcelles தரிப்பிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. அதன் பின்னர் சாரதி, பேரூந்தை அங்கேயே நிறுத்திவிட்டு நடந்து சென்றுள்ளார்.

55 வயதுடைய குறித்த சாரதி, தேடப்பட்டு, கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ‘பேரூந்தை நிறுத்திவிட்டு சென்றது ஏன்?’ எனும் போக்கில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்… அதன் பின்னர் வேறு விதமாக மாறியது. கண்காணிப்பு கமராவில் வீடற்றவரை தாக்கியது தெளிவாக பதிவாகியிருந்தது. தற்போது சாரதிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!