International
பிரான்ஸ்

வெடிகுண்டு அகற்றம்! – போர்த்து லா சப்பலில் இருந்து 1900 பேர் வெளியேற்றம்!!

வெடிகுண்டு ஒன்றை அகற்றுவதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, போர்த்து லா சப்பல் பகுதியில் இருந்து 1,900 பேர் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த கட்டிடப்பணிகளின் போது, இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று நிலத்துக்குள் புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னமும் வெடிக்கும் நிலையில் உள்ள இந்த வெடிகுண்டை அகற்றும் பணி, இன்று ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5:30 மணியில் இருந்து போர்த்து லா சப்பலில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி இடம்பெற்றது.

காலை 8:30 மணிக்குள்ளாக போர்த்து லா சப்பல் மற்றும் செந்தனியின் ஒரு பகுதியில் இருந்து மொத்தம் 1,900 பேர் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, தொடரூந்து நிலையங்களும் மூடப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் வெடிகுண்டு இருந்த இடத்தில் இருந்து 200 மீற்றர்கள் தூரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 7 மீற்றம் ஆழம் உள்ள குழி ஒன்றுக்குள் வைத்து வெடிக்கச் செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து 300 மீற்றர் சுற்றுவட்டாரத்துக்குள் இருந்த சகல மக்களையும் வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!