International
பிரான்ஸ்

14 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்! – பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம்!!

இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீதிகள், தேவாலயங்களுக்கு முன்பாக பல போராளிகள் குவிந்துள்ளனர்.

இல்-து-பிரான்சுக்குள் பல்வேறு பகுதியில் போராட்டக்காரர்கள் அணிவகுத்துள்ளனர். காலை 11 மணிக்கு சோம்ப்ஸ்-எலிசேயில் போராளிகள் குவிய தொடங்கினார்கள்.

Place de l’Etoile இலும் போராளிகள் குவிந்தனர்.

ஆறாம் வட்டாரத்தில் உள்ள place des Invalides  பகுதியில் நண்பகலின் பின்னர் 13:00 மணி அளவில் போராட்டக்காரர்கள் குவிந்தனர்.

Mantes-la-Jolie (Yvelines) பகுதியில் 400 வரையான போராளிகளும், ஊடகத்தினரும் குவிந்துள்ளனர். அங்கு அமைதியான சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toulouse (Haute-Garonne) பகுதியில் உள்ள சுற்றுவட்ட வீதியினை சில போராளிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

Rouen (Seine-Maritime) பகுதியில் உள்ள Place du General-de-Gaulle இல் காலை 10 மணி முதல் சில போராட்டக்காரர்கள் சேர்ந்திருந்தனர்.

கடந்த 13 ஆவது வார போராட்டத்தில் 51,400 பேர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!