International
பிரான்ஸ்

19 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!!

பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றுக்குள் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
19 ஆம் வட்டாரத்தின் rue Curial வீதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றுக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர், அங்கிருந்து சில துப்பாக்கிகள், போலியன சில ஆவணங்கள் மற்றும் 700 யூரோக்கள் மதிப்புள்ள பணமும் மீட்டுள்ளன. ஆயுதங்களில் 6.35mm கலிபர் வகை துப்பாக்கிகளும் மேலும் பல ஆயதங்களும் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினர், வெதுப்பகத்தின் நிர்வாகியை ‘பாதுகாப்பு பெட்டகத்தை’ திறக்கும்படி பணித்தனர். பின்னர் அதற்குள் இருந்தும் சில ஆயுதங்கள் கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருந்தன.
விசாரணைகளில், இத்துப்பாக்கிகள் வெதுப்பக நிர்வாகியின் சகோதரனின் ஆயுதங்கள் எனவும், அவர் முன்னாள் பிரெஞ்சு இராணுவத்தைச் சேர்ந்தவர் எனவும் வெதுப்பக நிர்வாகியால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை காவல்துறையினர் ஏற்க மறுத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!