International
பிரான்ஸ்

19 மாத குழந்தையை கத்தியால் குத்திய கொடூர தாய்! – ஜோந்தாமினர் தலையீடு!!

முப்பது வயதுகளையுடைய பெண் ஒருவர் தனது 19 மாத குழந்தையை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். 

La Chapelle-en-Serval (Oise) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 3 மணி அளவில், வீதியில் சென்றுகொண்டிருந்த நபர்கள் சிலர், வீடு ஒன்றுக்குள் இருந்து <<அவள் என் பிள்ளையை கொன்றுவிட்டாள்>> என கேட்ட அலறல் சத்தத்தை அடுத்து, ஜோந்தாமினரை அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வேகமாக வந்த ஜோந்தாமினர், சத்தம் கேட்ட வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்துளனர். உள்ளே 30 வயதுடைய பெண் ஒருவர் தொடையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையிலும், அவரது 19 மாத குழந்தையும், 5 வயது குழந்தையும் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும் கிடப்பதை பார்த்து அதிச்சியடைந்துள்ளனர். 

அப்பெண்ணின் கணவர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளார். <<தூங்கிக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு எழுந்தபோது என் மனைவி தனது வெட்டுக்காயத்தை மறைக்க முற்பட்டார். என் பிள்ளைகள் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவன் என் பிள்ளைகளை கொல்ல முயற்சித்திருக்க கூடும்>> என குறித்த நபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். 

மூவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு, குறித்த பெண்ணை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் அங்கிருந்து Fitz-James மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!