International
பிரான்ஸ்

3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சாரதி கைது!!

பரிசில் திங்கட்கிழமை காலை பண பட்டுவாடா ஒன்றின் போது 3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சாரதி, தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.

Adrien Derbez எனும் பெயருடைய 27 வயதுடைய சாரதியே இவ்வாறு பணத்துடன் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளான். சில நிமிடங்களில் வாகனம் பிறிதொரு வீதியில் தரித்து நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் எவ்வித பணமும் இருந்திருக்கவில்லை. சாரதி பணத்துடன் தப்பிச் சென்றுள்ளான்.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 17:00 மணி அளவில் Adrien Derbez,  Amiens நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். தனியார் குடியிருப்பு ஒன்றில் தனியாக இருந்த அவன், வீட்டில் இருந்து வெளியேறும் போது சுற்றி வளைத்த BRI படையினர், அவனை கைது செய்தனர். அவனுடன் பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவனிடம் இருந்து பணத்தாள்கள் அடங்கி சில பொதிகளும் மீட்கப்பட்டிருந்தது. இருவரும் தற்போது Amiens நகர காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பரிசுக்கு அழைத்துவரப்பட உள்ளதாகவும் பொபினி நகர அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!