International
பிரான்ஸ்

30 மகிழுந்துகள் உடைக்கப்பட்டு – கொள்ளை!!

மகிழுந்துகள் உடைக்கப்பட்டு, திருடப்பட்ட சம்பவம் ஒன்று Bois de Boulogne இல் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள Bois de Boulogne பூங்காவில் தரித்து நின்ற மகிழுந்துகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. ஒன்றின் பின் ஒன்றாக தரித்து நின்ற முப்பதுக்கும் மேற்பட்ட மகிழுந்துகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளது. Auteuil-aux-Lacs வீதியின் ஓரத்திலேயே இந்த மகிழுந்துகள் தரித்து நின்றுள்ளன. அனைத்து மகிழுந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு, உள்ளே கொள்ளையர்களால் தேடப்பட்டுள்ளது.

மகிழுந்துக்குள் கிடந்த பல முக்கியமான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளன. விசாரணைகளை அப்பிராந்திய காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!