International
பிரான்ஸ்

Aubervillers : பணம் எடுத்துச் செல்லும் வாகனம் சூறை! – பணத்துடன் சாரதியும் மாயம்!!

இன்று திங்கட்கிழமை காலை Aubervillers இல், பணம் எடுத்துச் செல்லும் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

வாகனம் தனியே வீதியில் தரித்து நின்றுள்ளது. வாகனத்துக்குள் இருந்த பணம் மொத்தமாக கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், சாரதியையும் காணவில்லை என அறியமுடிகிறது.

காலை 6 மணிக்கு வாகனம் மீட்கப்பட்டதாகவும், வாகனத்தை கடத்தி அதில் இருந்த சாரதியுடன் சேர்த்து பணம் கொள்ளையிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. கொள்ளையிடப்பட்ட பணத்தின் மொத்தப்பெறுமதி குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. பரிஸ் குற்றவியல் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!