International
பிரான்ஸ்

Auvernaux – A6 சாலையில் பயங்கர விபத்து! – நபர் பலி – குழந்தை உட்பட மூவர் காயம்!!

நேற்று புதன்கிழமை காலை A6 சாலையில் கோரமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்து, Auvernaux (Essonne) பகுதியின் Seine-et-Marne எல்லையை ஊடறுக்கும் A6 சாலையில் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றதுக்குரிய காரணம் குறித்து தகவல்கள் அறியமுடியவில்லை. உடனடியாக உலங்குவானூர்தியில் சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை பரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளானவர்களில் 46 வயதுடை சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், குழந்தை ஒரு இளைஞர் உட்பட மூவர் காயமடைந்ததாகவுக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்க வீதிகளும்  சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. நான்கு நோயாளர் காவு வண்டிகளும், இரண்டு உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டன. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!