International
பிரான்ஸ்

Avignon – துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம் – இரு காவல்துறை அதிகாரிகளின் சடலம் மீட்பு!!

நேற்று வெள்ளிக்கிழமை Avignon நகரில் இருந்து இரு மாநகர காவல்துறை அதிகாரிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் ஆண் எனவும் ஒருவர் பெண் எனவும் அறியமுடிகிறது. வெள்ளிக்கிழமை அவர்கள் தங்களது தறையில் இருந்ததாகவும், நீண்டநேரம் இருவரை உரையாடிக்கொண்டிருந்ததாகவும் அறிய முடிகிறது. பின்னர் 17:30 மணி அளவில் அவர்கள் சடலமாக கிடப்படது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் இது குறித்து தெரிவிக்கும் போது, << இது தற்கொலையா அல்லது கொலைச் சம்பவமா, இதில் மூன்றாம் நபர் சம்மந்தப்பட்டுள்ளாரா என்பதை தற்போது கூறமுடியாது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது>> என குறிப்பிட்டனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!