International
பிரான்ஸ்

Belleville – Pyrenees இடையே தீ விபத்து! – தடைப்பட்ட 11 ஆம் இலக்க மெற்றோ!!

Belleville மற்றும் Pyrenees நிலையங்களுக்கிடையே உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து 11 ஆம் இலக்க மெற்றோ போக்குவரத்து தடையைச் சந்தித்தது.

கடந்த புதன்கிழமை இரவு, 14 ஆம் இலக்க மெற்றோ தடைப்பட்டதைத் தொடர்ந்து, அதே வாரத்தில் மீண்டும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு  போக்குவரத்து தடைப்பட்டது. Belleville மற்றும் Arts-et-Metiers நிலையம் வரை மூன்று மணிநேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து தடைப்பட்டது. இது குறித்த முதல்கட்ட அறிவிப்பை RATP 20.46 மணிக்கு வெளியிட்டது. குறித்த 11 ஆம் இலக்க மெற்றோ முற்றாக தடைப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Belleville மற்றும் Pyrenees நிலையங்களுக்கிடையே உள்ள சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தீயணைப்பு படையினர் இதை கண்காணித்து வந்தனர். 21.10 மணிக்கு போக்குவரத்து திரும்பும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் 40 நிமிடங்கள் கழித்து போக்குவரத்து இயல்புக்கு திரும்பியது. RATP போக்குவரத்து தடைக்குரிய காரணங்களை தெரிவிக்கவில்லை.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!