International
பிரான்ஸ்

Bobigny – கஞ்சா திருடியதற்காக சித்திரவதை! – இருவருக்கு 14 வருடங்கள் வரை சிறை!!

கஞ்சா திருடிய இரு நபர்களை கட்டிவைத்து பல்வேறு சித்திரவதைகள் மேற்கொண்ட இருவருக்கு 14 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாற்பது வயதுகளையுடைய இரு நபர்கள், கஞ்சா பொதி பரிவர்த்தனையின் போது சிறு அளவுள்ள கஞ்சாவினை திருடியுள்ளதால், இரு நபர்களையும் தொடர்ச்சியாக 36 மணிநேரங்கள் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். கடந்த வாரத்தில் இச்சம்பவம் Bobigny இல் இடம்பெற்றிருந்தது. தண்ணீர் பாய்ச்சி அடித்து, நெருப்பினால் சுட்டு, மின்சாரத்தினால் சூடு வைத்து என தொடர்ச்சியாக 36 மணிநேரங்கள் கட்டிவைத்து சித்திரவதை செய்யப்பட்டனர். பின்னர், சித்திரவதையை மேற்கொண்ட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக 18 வருட சிறைத்தண்டனை கோரப்பட்ட நிலையில், பொபினி குற்றவியல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 8 ஆம் திகதி, அவர்களில் ஒருவருக்கு 7 வருட சிறைத்தண்டனையும், 14 வருட சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஸ்பெயினில் இருந்து வந்த 80 கிலோ எடையுள்ள கஞ்சா பொதியில் இருந்து, சிறிய அளவு கஞ்சாவினை இவர்கள் திருடியுள்ளனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!