International
பிரான்ஸ்

Bobigny-பாடசாலைக்கு அருகே ஆயுதமேந்திய நபர் கைது!!

நேற்று வியாழக்கிழமை பொபினியில் நபர் ஒருவர் பாடசாலை ஒன்றின் அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு 8.45 மணி அளவில், Marie Curie  சிறுவர் பாடசாலைக்கு எதிரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. களப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அப்பகுதி மாகர முதல்வரை சந்திக்க வந்ததாக, மகிழுந்தில் வந்த குறித்த நபர் குறிப்பிட்டார். அனுமதிக்கும் முன்னர் அவர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மகிழுந்தையும் காவல்துறையினர் சோதனையிட்டனர். அதன்போது மகிழுந்துக்குள் பிஸ்டல் வகை கைத்துப்பாக்கி இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகர முதல்வர் தனது அடுத்தகட்ட பயணத்தை இரத்துச் செய்து, வீடு திரும்பினார். மகிழுந்துன் இருக்கையின் கீழ் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!