International
பிரான்ஸ்

Burkina Faso : பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்! – இரண்டு பிரெஞ்சு இராணுவத்தினர் பலி!!

Burkina Faso நாட்டில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல் முறியடிப்பு சம்பவத்தில் இரண்டு பிரெஞ்சு இராணுவத்தினர் கொல்லபப்ட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இன்று வெள்ளிக்கிழமை இராணுவ அமைசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரியவந்துள்ளது. குறித்த நாட்டில் பயங்கரவாதத்து எதிரான உள்ளூர் யுத்தம் ஒன்றில் பிரெஞ்சு இராணுவத்தினரும் அங்கெடுத்து வந்திருந்தது வாசர்கள் அறிந்ததே. கடந்த மே 1 ஆம் திகதி இரண்டு பிரெஞ்சு நபர்கள் உட்பட நால்வரை பயங்கரவாதிகள் பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்தனர். இந்நிலையில் அவர்களை மீட்கும் பணியில் இறங்கிய இராணுவத்தினர், மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதில் Cédric Pierrepont மற்றும் Alain Bertoncello ஆகிய இரண்டு பிரெஞ்சு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலின் முடிவில் நான்கு பணயக்கைதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தனர். உயிரிழந்த அதிகாரிகளுக்கு தமது அஞ்சலிகளை பிரெஞ்சு இராணுவ அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!