International
பிரான்ஸ்

CDG விமான நிலையத்தில் – சுற்றுக்காவல் பெண் அதிகாரி தற்கொலை!!

சாள்-து-கோல் விமான நிலையத்தில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பெண் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுற்றுக்காவல் நடவடிக்கை (Sentinel force ) அதிகாரியாக பணி புரியும், 24 வயதுடைய இளம் பெண் அதிகாரியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை இவரது சடலம் , அவரது சக அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாள்-து-கோல் விமான நிலையத்தின் பகுதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Villepinte நகர காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!