International
பிரான்ஸ்

Drancy! – ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது கொலை முயற்சி! – மூவர் கைது!!

Drancy இல், 29 வயதுடைய ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய ஓரினச் சேர்க்கையாளர் ஒருவரை சுற்றிவகைத்த மூன்று நபர்கள், அவரை தாக்கி பணம் பறித்ததோடு, கத்தியால் குத்தியும் உள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மூவரில் சிறுவன் ஒருவனும் உள்ளான்.

<<29 வயதுடைய கெவின் எனும் நஅர், மகிழுந்தை விட்டு வெளியேறியதும், அவன் மீது பாய்ந்த மூவர் சரமாரியாக தாக்கியதோடு, கத்தியால் குத்தியும் உள்ளனர்.>> என ஓரினச் சேர்க்கையாளர்கள் அமைப்பின் தலைவர் Guillaume Mélanie தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொபினி குற்றவியல் நீதிமன்றத்தில் விரைவில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!