International
பிரான்ஸ்

€0.12 பணத்துக்காக – கடைக்காரரை தாக்கிய நபருக்கு பத்துமாத சிறை!!

கடைக்காரர் ஒருவரை தாக்கிய குற்றத்துக்காக 45 வயதுடைய நபர் ஒருவருக்கு பத்துமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் Vandœuvre-lès-Nancy இல் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் நுழைந்த SDF (வீடற்றவர்) ஒருவர் ‘பியர்’ போத்தல் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் செலுத்திய பணத்தில் 12 சதம் குறைவாக இருந்துள்ளது. இதனால் அவரை தடுத்து, மீதி பணத்தினை கடையின் கணக்காளர் கேட்டுள்ளார். ஆனால் குறித்த நபர் அங்கிருந்து பியர் போத்தலுடன் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். உடனே கணக்காளர் அவரின் சட்டையில் எட்டி பிடித்துள்ளார். 

இத்தோடு சம்பவம் முடியவில்லை. குறித்த வீடற்ற நபர் அங்கிருந்து தப்பிப்பதற்காக கணக்காளரை பிடித்து நன்றாக தாக்கியுள்ளார். முகத்திலும் பலமாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். பின்னர் காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்ததோடு, விசாரணைகளையும் ஆரம்பித்து, நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தினர். <<அடிப்படையில் இது ஒரு கொள்ளைச் சம்பவம். €0.12 தான் என்றபோதும் இதை கொள்ளைச் சம்பவமாக தான் சட்டம் கருதுகின்றது>> என வழக்கறிஞர் குறிப்பிட்டார். அவருக்கு பத்துமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!