International
பிரான்ஸ்

€8 பில்லியன் யூரோக்கள் செலவில் – மெற்றோ விஸ்தரிப்பு பணி!!

எட்டு பில்லியன் யூரோக்கள் செலவில் மெற்றோ வழிகளை விஸ்தரிப்பு செய்ய Ile-de-France Mobilités தீர்மாணித்துள்ளது.

இதற்கான தொடரூந்து தண்டவாளங்கள், நிலையங்கள் அமைத்தல் போன்றவற்றுக்கான ஏலம் விடுக்கப்பட உள்ளது. இந்த விஸ்தரிப்பு பணியில் புதிதாக 338 தொடரூந்துகள் சேவைக்கு கொண்டுவரப்பட உள்ளன. இந்த மொத்த பணியும் 2040 ஆம் ஆண்டின் தேவைகளை கருத்தில் கொண்டு விஸ்தரிக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக மொத்தமாக €8.3 பில்லியன் யூரோக்களை Ile-de-France Mobilités ஒதுக்கியுள்ளது.

மிக சவாலான இந்த விஸ்தரிப்பு பணியில், கிட்டத்தட்ட அனைத்து வழி மெற்றோக்களும் தனது எல்லையினை விஸ்தரிக்க உள்ளது. புதிய நிலையங்கள், தொடரூந்துகளுடன் இலவச Wifi போன்ற நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!