Mon. Sep 27th, 2021

நவம்பர் 13 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில், இன்று உயிருடன் இருக்கும் ஒரே நபர் பயங்கரவாதி சாலா அப்தெஸ்லாம் மட்டுமே. இந்த தாக்குதல் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் பரிசில் கடந்தவாரம் ஆரம்பமாகியிருந்தது.

இன்று ஆறாவது நாள் விசாரணையில், பயங்கரவாதி சாலா அப்தெஸ்லாம், நீதிமன்றத்தில் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தான். அதில் மிக முக்கியமானது “பிரான்சில் தாக்குதல் நடத்தியது ஏன்?:” என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தான்.

“தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை. நாங்கள் பிரான்சை தாக்கினோம். மக்கள் தொகையை, பொதுமக்களை குறிவைத்தோம். இதில் என் தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை!” என தெரிவித்த சாலா அப்தெஸ்லாம், “சிரியா மீது பிரான்ஸ் தாக்குதல் நடத்தியது” என குறிப்பிட்டு பதிலுக்கு நாம் தாக்குதல் நடத்தினோம் என தெரிவித்தான்.

அவன் மேலும் தெரிவிக்கையில், “விசாரணைகளில் நீங்கள் பயங்கரவாதிகள், ஜிகாதிகள், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் என குறிப்பிடுபவர்கள் உண்மையில் இஸ்லாமியர்கள்!” எனவும் அவன் தெரிவித்தான்.  

share

By Editor

error: Alert: Content is protected !!