Tue. Oct 26th, 2021

பிரான்சில் கொரோனாத் தொற்று வீழ்சியடைந்த வரும் நிலையிலும், சாவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஒக்டோபர் 15ம் திகதி முதல் கொரோனாப் பரிசோதனைகளிற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவித்திருக்கும் நிலையில் சாவுகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

திங்கட்கிழமைகளில் முழுமையான தரவுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படாத நிலையிலும், மிகலும் சொற்பமான கொரோனாப் பரிசோதனைகளே ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் நிலையில்,

கடந்த 24 மணி நேரத்திற்குள் 1.309 பேரிற்குத் தொற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்தமாக 6.995.628 பேரிற்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது மிக விரைவில் ஏழு மில்லியனைத் தாண்டிவிடும் அபாயம் உள்ளது.

இன்று பிரான்சில் கொரோனாவினால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கையானது 84 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் மொத்தமாகச் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 116.528 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தரவுகளின்படி, தற்போது 7.980 பேர் வைத்தியசாலைகளில், கொரோனத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1.571 உயிராபத்தினால் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தரவுகள் முழுமையாக வழங்கப்படவில்லை.

share

By Editor

error: Alert: Content is protected !!