Tue. Oct 26th, 2021

மழை காலங்களில் தொடருந்து நிலையங்களில் ‘இலவசமாக’ குடைகளை பெற்றுக்கொள்ளும் வசதி ஒன்று ஏற்படுத்தி தரப்பட உள்ளது.

இந்த புதிய முயற்சியை RATP மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக பரிசில் உள்ள 10 தொடருந்து நிலையங்களில் இவ்வருடத்தின் செப்டம்பர் மாதம் முதல் பரீட்சாத்தமாக செயற்படுத்த உள்ளது.

Opéra, lignes 3, 7, 8 et RER A ;

Gambetta, lignes 3 et 3bis ;

Ensemble des stations de la ligne 14 sauf Châtelet மற்றும் Bercy.

ஆகிய நிலையங்களில் முதல் கட்டமாக இந்த சேவை நடைமுறைக்கு வருகின்றது.

இந்த கட்டணம் இலவசம் என்றபோதும், சில விதிமுறைகள் உள்ளது. €5 யூரோக்களை முற்பணமாக நீங்கள் செலுத்திவிட்டே குடையை பெற்றுக்கொள்ள முடியும். பின்னர் நீங்கள் அன்றைய நாளில் குடையை திருப்பி கொடுத்துவிட்டு பணத்தை மீள பெற்றுக்கொள்ளலாம். நேர எல்லைகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

share

By Editor

error: Alert: Content is protected !!