Tue. Oct 26th, 2021

வலது சாரிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னைப் பிரகடணப்படுத்தியிருக்கும் எரிக் செமூர், தொடர்ச்சியாகப் பெரும் விமர்சனத்திற்கும் விவாதங்களிற்குள்ளும் உள்ளாகி வருகின்றார்.

பிரான்சில் குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டும், அவர்களால் பிரான்சிற்கு ஆபத்து என்ற இவரின் கருத்து பெரும் எதிர்ப்பிற்குள்ளாகி உள்ளதுடன் பிரதான வலதுசாரிக் கட்சி, இவரை நிராகரித்தும் உள்ளது.

இந்நிலையில் இவரிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று boulevard de Clichy யில் இவரை இடைமறித்த ஒருவர், «மெக்காவின் குரானின் பெயரால் உன்னைக் கொன்று விடுவேன்» என அச்சுறுத்தி உள்ளார். உடனடியாக இவரின் மெய்ப்பாதுகாவலர் இவரை பாதுகாப்பாக வாகனத்திற்குக் கொண்டு சென்று வெளியேற்றி உள்ளார்.

இது தொடர்பாக எரிக் செமூர் வழங்கிய செவ்வியில் 

«இது தான் இன்றைய பிரான்சின் நிலைமை. பிரெஞ்சு மக்கள் இப்படியான அச்சுறுத்தல்களையும் அவமானங்களையும் நாளாந்தம் சந்தித்து வருகின்றனர். எனக்கு மெய்ப்பாதுகாவலர் இருந்தமையால் பாதுகாக்கப்பட்டுள்ளேன். பிரெஞ்சு மக்களிற்கு யார் பாதுகாப்பு»

என எச்சரித்துள்ளார்.

share

By Editor

error: Alert: Content is protected !!