International
பிரான்ஸ்

Essonne – பண இயந்திரத்தை கொள்ளையிட முயற்சித்த மூவர் கைது!!

#Essonne – பண இயந்திரத்தை கொள்ளையிட முயற்சித்த மூவர் கைது!!

உழவு இயந்திரம் மூலம் பண வழங்கி இயந்திரத்தை கொள்ளையிட முயற்சித்தமூவர் ஜோந்தாமினர்களால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Essonne மாவட்டத்தில் 7.500 பேர்வரை வசிக்கும் Ballancourt-sur-Essonne எனும் சிறிய கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று ஜூலை 7 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு உழவு இயந்திரம் ஒன்றில் வந்த ஐந்து நபர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த  Crédit Industriel et Commercial (CIC) வங்கியின் பணவழங்கி இயந்திரத்தை திருட முற்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கடத்தல்காரர்களில் மூவரை Evry பகுதி ஜோந்தாமினர் கைது செய்துள்ளனர். தப்பி ஓடியுள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் ரோமேனியா நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிய முடிகிறது. விசாரணைகளை Evry பகுதி ஜோந்தாமினர் மேற்கொண்டு வருகின்றனர்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!