தீயணைப்பு படை வீரர் ஒருவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Pierre-Buffière, Haute-Vienne நகரில் பணிபுரியும் தீயணைப்பு படை வீரர் ஒருவரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 36 வயதுடைய இவர் தன்னுடன் பணியாற்றும் சக வீரர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.
பல பாலியல் துன்புறுத்தலுடன் அவர் தொடர்பு பட்டதால், கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு 18 மாதங்கள் பணிநீக்கமும், 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீரர் தீயணைப்பு படையினரின் பயிற்றுவிப்பாளர் எனவும், 2018 ஆம் ஆண்டில் இருந்து 2020 ஆம் ஆண்டு வரை அவர் இது போன்ற பாலியல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார் எனவும் அறிய முடிகிறது.