Sun. Jan 17th, 2021

கொரோனா சிகிச்சை மையங்கள் அடங்கிய இணையத்தளம் ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான்சில் கொரோனா வைரசுக்குரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவது தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எங்கெல்லாம் சிகிச்சைமையங்கள் உள்ளன என்பது தொடர்பான தகவல்களையும், இலவச தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran சற்று முன்னர் தெரிவித்தார். 

இந்த இணையத்தளமூடாக நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை அறிந்து கொள்ளலம என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

*ஜனவரி 14 ஆம் திகதி அன்று இந்த இணையத்தளமும், இலவச தொலைபேசி இலக்கமும் செயற்படும் என அறிய முடிகிறது.

share

By Editor

error: Alert: Content is protected !!