Wed. Jan 27th, 2021

கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பு மருந்து ஒன்று விரைவில் பிரான்சுக்கு வர உள்ளது. 

AstraZeneca என அழைக்கப்படும் புதிய மருந்தே விரைவில் பிரான்சுக்குள் கொண்டுவரபட உள்ளது. எதிர்பார்க்கப்பட்ட திகதியை விட முன்னதாகவே, (ஜனவரி இறுதிக்குள்) AstraZeneca மருந்தை கொண்டுவருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த தடுப்பு மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் பின்னரே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய AstraZeneca தடுப்பு மருந்து பிரித்தானியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதேவேளை, நாளை திங்கட்கிழமையில் இருந்து Moderna எனும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்ட உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

share

By Editor

error: Alert: Content is protected !!