தீயணைப்பு வாகனத்தை கடத்தி எரியூட்டியுள்ள சம்பவம் ஒன்று Puy-de-Dôme நகரில் இடம்பெற்றுள்ளது.
மத்திய பிரான்சின் Clermont-Ferrand, Puy-de-Dôme நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணிக்கு கொள்ளையர்கள் சிலர் அப்பிராந்திய தீயணைப்பு படையினரின் கனரக வாகனம் ஒன்றினை திருடிச் சென்றுள்ளனர். இத்தகவல் உள்ளூர் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, வாகனம் தேடப்பட்டது.
வாகனத்தை கடத்திய கொள்ளையர்கள், அங்கிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஒரு நகரில் வைத்து வாகனத்தில் இயந்திரத்தை அகற்றி, பின்னர் வாகனத்தை எரியூட்டியுள்ளனர்.
மறுநாள் காலை குறித்த வாகனம் தீக்கிரையாகி எரிந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.