இரு ஜொந்தாம் அதிகாரிகள் இரு வேறு நகரங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இரு வேறு நகரங்களில் இந்த அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். Lyon (Rhône) மற்றும் Toulouse (Haute-Garonne) நகரங்களில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Toulouse நகரில் பணிபுரியும் Major Patrick A. எனும் 56 வயதுடைய அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 27 மற்றும் 30 வயதுடைய மகள்களின் தந்தையான இவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இரண்டாவது சம்பவம் Lyon நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு கடமையாற்றும் 53 வயதுடைய பெண் ஜொந்தாம் அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் விவாகரத்து ஆனவர் எனவும், தனது மகளுடன் வசித்து வந்துள்ள நிலையில் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.